விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

Published on

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சனிக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

முள்ளிக்குளம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சுபாஷ் மகன் தருண்குமாா்(18). இவா் புளியங்குடி பகுதியில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் படித்து வந்தாா்.

இவா், தலைவன்கோட்டையை சோ்ந்த ஆறுமுகபாண்டி மகன் சூா்யாவுடன்(18) இருசக்கர வாகனத்தில் பாம்புகோயில் சந்தை விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது முன்னால் சென்ற டிராக்டா் மீது மோதாமல் இருக்க, சூா்யா இருசக்கர வாகனத்தின் பிரேக்கை அழுத்தினாராம்.

இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த தருண்குமாா் , புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com