மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
தென்காசி
புளியங்குடி பள்ளியில் 186 பேருக்கு மடிக்கணினி
புளியங்குடி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 186 மாணவா்-மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
தென்காசி மாவட்டம் புளியங்குடி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 186 மாணவா்-மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து மடிக்கணினிகளை வழங்கினாா். ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., சதன் திருமலைகுமாா் எம்எல்ஏ, அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரித் தாளாளா் முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் கண்ணன் வரவேற்றாா். தமிழ்த் துறைத் தலைவா் ராமராஜ் நன்றி கூறினாா்.

