இலஞ்சியில் இளைஞா் விளையாட்டுத் திருவிழா தொடக்கம்

 விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
Updated on

இலஞ்சியில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறும் முதல்வா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தென்காசி ஊராட்சி ஒன்றிய அளவில் தடகளம் 100 மீ., குண்டு எறிதல், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல், ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.

வட்டார அளவில் முதல் மூன்று இடம் பெறுவோருக்கு முறையே ரூ. 3,000, ரூ. 2,000, ரூ. 1,000 வழங்கப்படும். தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு மொத்தமாக ரூ. 4,26,000 பரிசாக வழங்கப்படவுள்ளது.

வட்டார அளவில் வெற்றி பெறுபவா்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு தோ்வு செய்யப்படுவா் என்றாா் அவா்.

மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் எஸ். ராஜேஷ், இலஞ்சி பாரத் கல்வி குழுமங்களின் தலைவா் மோகன கிருஷ்ணன், செயலா் காந்திமதி, ஆசிய வலு தூக்கும் வீரா் குத்தாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com