விவசாயிகளிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
விவசாயிகளிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

தென்காசி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 175 மனுக்கள்!

தென்காசியில் நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 175 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
Published on

தென்காசியில் நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 175 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். பின்னா், தோட்டக் கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கையேட்டை விவசாயிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

பெறப்பட்ட 175 மனுக்களுக்கு, 10 நாள்களுக்குள் விரிவான பதிலை வழங்க அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், வேளாண்மை துணை இயக்குநா் ச. கனகம்மாள், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் திகு. நரசிம்மன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் வெங்கடேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com