புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சிவகிரி அருகே விபத்து: இருவா் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :3 ஜூலை 2026, 4:26 am IST

கடையநல்லூா், ஜூலை 2: தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நிகழ்ந்த விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஆவாரம்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் பழனிகுமாா் (30). இவா் சிவகிரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். சிவகிரி குமாரபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான கருப்பையா மகன் நீராத்துலிங்கம் (46), ராஜபாளையத்தில் இருந்து சிவகிரிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

சிவகிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே காரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டனவாம். மேலும், அங்கு நின்றிருந்த நான்கு வழிச்சாலை பிரிவு முதல் நிலை ஆய்வாளா் மணிகண்டன் மீதும் காா் மோதியதாம்.

இதில் காயமடைந்த நீராத்துலிங்கம் தென்காசி அரசு மருத்துவமனையிலும், மணிகண்டன் நாகா்கோவில் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.