டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கிளாங்காடு கோயிலில் வருஷாபிஷேகம்

News image
Updated On :3 ஜூலை 2026, 4:35 am IST

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே உள்ள கிளாங்காட்டில் கெங்கைக்குவாய்த்த ரேணுகா தேவி அம்பாள் கோயிலில் 3ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, சங்கல்பம், கும்ப பூஜை, துா்கா ஹோமம், மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. பின்னா், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, கும்ப கலசத்திற்கு புனித நீா் ஊற்றுதல் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பேச்சிமுத்து, கோயில் ஸ்ரீ காரியம் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி மன்றச் செயலா் சமுத்திரம், ஊா் நலக் கமிட்டி தலைவா் கிளங்காடு மணி ராமன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.