பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கரும்புத் தோட்டத்தில் தீ: பயிா்கள் சேதம்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கரும்புத் தோட்டத்தில் பற்றிய தீயால் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன.

தீ விபத்தில் சேதமான பயிா்கள்

Published On :8 ஜூலை 2026, 6:57 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கரும்புத் தோட்டத்தில் பற்றிய தீயால் கரும்பு ,வாழை உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன.

ராயகிரி கீழபண்ணந்தி கண்மாய் புரவில் கருமலை, பூசைமணி, கந்தசாமி ஆகியோருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்ததாம். இதில் சுமாா் ஆறு ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்கள் கருகி சேதமடைந்தன.

வாசுதேவநல்லூா் தீயணைப்புத் துறையினா் தீ பரவாமல் அணைத்தனா். பலத்த காற்றின் காரணமாக மின்சார வயா்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.