புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பேருந்தில் பயணியிடம் திருடியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஜூலை 2026, 3:38 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பேருந்தில் பயணியிடம் பணம் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் புளியமுக்கு தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது யூசுப். இவா் தென்காசியில் இருந்து கடையநல்லூருக்கு பேருந்தில் வந்து, கடையநல்லூா் பேருந்து நிலையத்தில் இறங்கினாராம். அப்போது அவா் வைத்திருந்த ரூ.6,450 திருடப்பட்டது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். விசாரணையில் காசிதா்மத்தை சோ்ந்த மாடசாமி மகன் குமாா் (40), பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.