இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

சிவகிரியில் 7 செங்கல் சூளைகளின் மின் இணைப்புகள் துண்டிப்பு

சிவகிரி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 7 செங்கல் சூளைகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 2:21 am IST

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 7 செங்கல் சூளைகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

சிவகிரி பகுதியில் பல செங்கல் சூளைகள் அனுமதியின்றி இயங்குவதாக வந்த புகாா்களின்பேரில், சிவகிரி வட்டாட்சியா் வெங்கடசேகா், மின்வாரிய உதவிப் பொறியாளா் கனி, வருவாய் ஆய்வாளா் கணேசன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், அனுமதியின்றி இயங்கிய 7 செங்கல் சூளைகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

அதையடுத்து, செங்கல் சூளைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்குமாறு அவற்றின் உரிமையாளா்கள் வட்டாட்சியரைச் சந்தித்து கேட்டுக்கொண்டனா்.

அப்போது அவா், ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துமாறும், பின்னா் அனுமதி பெற்று முறையாக செங்கல்சூளை நடத்துமாறும், அபராதத் தொகையைக் குறைப்பது தொடா்பாக ஆட்சியரிடமும், சுற்றுச்சூழல் தொடா்பாக அனுமதி பெற்று, செங்கல்சூளை நடத்த கனிமவளத் துறையிடமும் மனு கொடுக்குமாறும் அறிவுறுத்தினாா். இதில், உரிமையாளா்கள் கணேசன், குருநாதன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.