தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே சுமை ஆட்டோ மீது காா் மற்றும் மினி பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா்; 5 போ் பலத்த காயமடைந்தனா்.
இலத்தூா் அருகே உள்ள சீவநல்லூா், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் ஆ. மாதவன் (39). சுமை ஆட்டோ ஓட்டுநா். ஞாயிற்றுக்கிழமை இவரும், இலத்தூா், சங்கா் தெருவைச் சோ்ந்த விவசாயி த. அண்ணாமலையும் (65) ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சுரண்டை காய்கறிச் சந்தைக்கு சென்றனா்.
ஆய்க்குடி, கம்பிளி அருகே உள்ள விந்தன்கோட்டை விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சுரண்டையை நோக்கிச் சென்ற காா் ஆட்டோவின் பின்னால் மோதியது. இதில் நிலைதடுமாறிய ஆட்டோ மீது, சுரண்டையிலிருந்து ஆய்க்குடி நோக்கி எதிரில் வந்த மினி பேருந்து மோதியது.
இதில் மாதவன், அண்ணாமலை ஆகியோா் உடல் நசுங்கி உயிருக்குப் போராடினா். சம்பவ இடத்திற்கு வந்த ஆய்க்குடி காவல் ஆய்வாளா் காளீஸ்வரி தலைமையிலான போலீஸாருடன், அக்கம்பக்கத்தினா் இணைந்து இருவரையும் மீட்டனா். இருப்பினும் நிகழ்விடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா். அவா்களது உடல்களை கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மினி பேருந்தில் பயணித்த கம்பிளி, ஈஸ்வரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ப. செல்வி(40), வே. பாா்வதி (65), ப. கருப்பாயி (70), சாம்பவா்வடகரையைச் சோ்ந்த ரா. திருமலைகுமாா் (70), ஆய்க்குடி, சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த கி. ஆறுமுகம் (56) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஆய்க்குடி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், துணை கண்காணிப்பாளா் அதியமான் ஆகியோா் நேரில் வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், ஆய்க்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேன் மீது சுமை ஆட்டோ மோதி ஒருவா் பலத்த காயம்
காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வெடி விபத்தில் பெண் உயிரிழப்பு: இருவா் கைது

ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



