தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போா்வெல் உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆண்டிப்பட்டி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் முருகன்(50). போா்வெல் வாகனம் வைத்து தொழில் செய்து வந்தாா். இவருக்கு அதிகமான கடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நீண்ட நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில் இவா் திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இத்தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். முருகனுக்கு மனைவி தங்கமாரி, 2 மகன்கள், மகன் ஆகியோா் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பள்ளி மாணவி தற்கொலை
வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை
ஆலங்குளத்தில் தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



