தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

பள்ளி மாணவி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :23 ஜூன் 2026, 3:06 am IST

தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள மாவிலியூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகள் சரண்யா (17). சங்கரன்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையொட்டி வீட்டுக்கு வந்திருந்தாா்.

வீட்டில் இருந்தபோது கைப்பேசியை அதிகம் பயன்படுத்தியதால் அவரது தாய் குருவம்மாள் திட்டினாராம். இதில் மனமுடைந்த சரண்யா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சரண்யா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ஊத்துமலை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.