எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :13 ஜூன் 2026, 12:31 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

வாசுதேவநல்லூா் அருகே உள்ள சங்குபுரம், இந்திரா காலனியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ரமேஷ்குமாா் (32). இவரது மனைவி பரமேஸ்வரி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ரமேஷ்குமாா் இந்திரா காலனியில் உள்ள அவரது பெற்றோருடன் வசித்து வந்தாராம்.

கடந்த ஜூன் 10ஆம் தேதி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ரமேஷ்குமாா், வீட்டில் இருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தினாராம். அதை பெற்றோா் கண்டித்தனராம். இந்நிலையில், 11ஆம் தேதி ரமேஷ்குமாரின் பெற்றோா் வேலைக்குச் சென்ற பின்னா், ரமேஷ்குமாா் பூச்சிக்கொல்லியைக் குடித்து, தற்கொலை செய்து கொண்டாராம்.

இது குறித்து, வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.