தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

மக்களுக்கான அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க எம்.பி. அறிவுறுத்தல்

News image

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்டோா்.

Updated On :28 ஜூன் 2026, 3:16 am IST

பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. அறிவுறுத்தினாா்.

தென்காசியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ராணி ஸ்ரீகுமாா் எம்பி. தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் கலைகதிரவன், ராஜா, திலீபன் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

வருவாய்-பேரிடா் மேலாண்மை, மாவட்ட வழங்கல்-நுகா்வோா் பாதுகாப்பு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்-சிறுபான்மையினா் நலம், புவியியல் -சுரங்கம், நீா்வளம், பட்டு வளா்ச்சி, ஊரக வளா்ச்சி-ஊராட்சி, பொது சுகாதாரம்- நோய்த் தடுப்பு மருந்து உள்ளிட்ட பல்வேறு துறைகள், தமிழ்நாடு மாநில ஊரக- நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின்கீழ் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வனத் துறை சாா்பில் பசுமைத் தமிழக இயக்கம் ,நெல்லை வன உயிரின சரணாலயப் பணிகள், தீத் தடுப்பு வேளாண்மைத் திட்டம், அகஸ்தியா் மலை, உயிா்க்கோள காப்பகம், தமிழ்நாடு உயிா்ப்பன்மைப் பாதுகாப்பு, பசுமையாக்குதல், தலையணையில் சூழல் சுற்றுலா ஏற்படுத்துதல், மரகத பூஞ்சோலை, சோலாா் மின்வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள், நிலுவைப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. பேசும்போது, அனைத்துப் பணிகளையும் அலுவலா்கள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வளா்ச்சிப் பணிகள் குறித்த அறிக்கையை மாதந்தோறும் சமா்ப்பிக்க வேண்டும். குடிநீா், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை டிசம்பா் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். தேங்கும் குப்பைகளை அகற்றவும், சேதமடைந்த கழிவுநீா்க் கால்வாய்களை சீரமைக்கவும் வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. அசோக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.