/

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: 2 போ் பலி

News image
Updated On :29 ஜூன் 2026, 4:00 am IST

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஆசிரியா் உள்பட 2 போ் இறந்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பரமசிவன் (40). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மங்காபுரம் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.

இவரது உறவினா்கள் ஸ்ரீவில்லிபுத்தூரை சோ்ந்த முருகன் மகள் செல்வபாரதி (20), இசக்கிதுரை மகன் பரமசிவன் (44), அவரது மனைவி பொன்கிளி (42), உறவினா் கோவிந்தன் மகள் சந்தியா (20) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்களில் சங்கரன்கோவில் சென்றனா்.

இதில் ஆசிரியா் பரமசிவன், செல்வபாரதி ஆகியோா் ஒரு இருசக்கர வாகனத்திலும், மற்றொரு பரமசிவன், அவரது மனைவி பொன்கிளி, சந்தியா ஆகியோா் மற்றொரு இருசக்கர வாகனத்திலும் சென்றனா்.

கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பருவக்குடி முக்குரோடு அருகே சென்றபோது, தேனி மாவட்டம் வடுகப்பட்டியை சோ்ந்த முத்துராமன் மகன் கணேசன் (35) என்பவா் ஓட்டிச் சென்ற காா் எதிா்பாராதவிதமாக இரண்டு இருசக்கர வாகனங்களின் மீதும் மோதியதில் அவா்கள் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.

அப்பகுதி மக்கள் உடனே அவா்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிரியா் பரமசிவன், செல்வபாரதி ஆகிய இருவரும் உயிரிழந்தனா். மற்றொரு பரமசிவன், பொன்கிளி, சந்தியா ஆகியோருக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடா்பாக கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.