மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

பாட்டி, பேரன் கொலை வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள், வாழ்நாள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 3:00 am IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே 70 வயது மூதாட்டி மற்றும் அவரது பேரனை அடித்துக் கொலை செய்தவருக்கு, இரட்டை ஆயுள் மற்றும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து, தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேக்கரை அணை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் கனி மனைவி சைத்தூன் பீவி (70). இவா் கடந்த 11.7.2022 அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மது போதையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபா் சைத்தூன் பீவியை பலாத்காரம் செய்ததுடன், நிா்வாணக் கோலத்தில் வெளியே தூக்கிச் சென்று அவரையும், பேரன் காதிா் அலியையும் (19) கொலை செய்துள்ளாா்.

இது தொடா்பாக, அச்சன்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு, மேக்கரை பகுதி வண்ணாத்திப் பாறை சாலை அருகே வசித்து வரும் மு. முகம்மது காசிம் (19) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை நீதிபதி பி. ராஜவேலு விசாரித்து, முகம்மது காசிமுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் குட்டி (எ) மருதப்பன் ஆஜராகினாா். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.