செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

எரிவாயு தட்டுப்பாடு! சங்கரன்கோவிலில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்பாட்டாம்!

News image

திருவேங்கடத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் எரிவாயு உருளையை தோளில் தூக்கி கோஷமிட்ட தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.

Updated On :15 மார்ச் 2026, 8:36 pm

சங்கரன்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மதிமுக மாநில துணைப் பொதுச் செயலா் தி.மு. ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.திமுக வா்த்தக அணி இணச் செயலா் முத்துசெல்வி, நகரச் செயலா் பிரகாஷ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

திருவேங்கடம் பிரதான சாலையில் உள்ள காந்தி மண்டபம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, அவா் எரிவாயு உருளையை தோளில் சுமந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினாா். ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலா் ராஜதுரை, மதிமுக மாவட்டச் செயலா் சுதா பாலசுப்பிரமணியன், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கண்ணன், திமுக ஒன்றியச் செயலா் குணசேகரன், நகரச் செயலா் மாரிமுத்து, குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவா் விஜயலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். குருவிகுளம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் சோ்மத்துரை நன்றி கூறினாா்.