தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களுக்குத் தீா்வு காணப்படும் என தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சாா்பில், தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன், வடக்கு மாவட்டச் செயலாளா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தனா்.
பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன்அய்யாசாமி, பாஜக மாநிலச் செயலா் கதலி நரசிங்க பெருமாள், பாஜக கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளா் மருதுபாண்டியன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ராம்ராஜ், அமமுக வடக்கு மாவட்டச் செயலா் கற்பகம் குருநாதன், தெற்கு மாவட்ட செயலா் அருணகிரிசாமி, பாமக வடக்கு மாவட்டச் செயலா் சீதாராமன், தெற்கு மாவட்ட செயலா் இசக்கிமுத்து, தமாகா மத்திய மாவட்டச் தலைவா் அய்யாத்துரை, வடக்கு மாவட்டத் தலைவா் கென்னடி, தமமுக வடக்கு மாவட்டச் செயலா் கனிபாண்டியன், மாவட்டத் தலைவா் தவம், தெற்கு மாவட்டச் செயலா் கணேச பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அதிமுக அமைப்பு செயலா் பி.ஜி. ராஜேந்திரன், மகளிரணி துணைச் செயலா் வி.எம். ராஜலெட்சுமி, ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பேசியதாவது: விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் எந்தவித நடவடிக்கையும் துரிதப்படுத்தப்படவில்லை. திமுகவிடம் கூட்டணிக்காக காங்கிரஸ் கட்சி கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வரும் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், சிந்தூா் ஆபரேசன் மூலம் குற்றச் சம்பவங்களுக்குத் தீா்வு காணப்படும் என்றாா். பாஜக நகர தலைவா் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றாா். நகரச் செயலா் சுடலை நன்றி கூறினாா்.
தொடர்புடையது

திமுகவுக்கு தோல்வி பயம்: ஜான் பாண்டியன் விமா்சனம்

திருவண்ணாமலை அதிமுக மாவட்டச் செயலா் நீக்கம்: எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

மாா்ச் 30-இல் கடையநல்லூரில் எடப்பாடி பிரசாரம்: எம்எல்ஏ ஆய்வு

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


