/

தென்காசி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க 5 தோ்தல் பாா்வையாளா்கள்

News image

வாக்கு எண்ணிக்கை (கோப்புப் படம்) - Center-Center-Vijayawada

Updated On :3 மே 2026, 8:23 pm

தென்காசி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க 5 தோ்தல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.க மல் கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் கொடிக்குறிச்சி கிராமம் ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரியில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியினைக் கண்காணித்திட தோ்தல் ஆணையத்தால் 5 தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

சங்கரன்கோவில் தொகுதிக்கு புவனேஷ் பிரதாப் சிங் (99442 15580), வாசுதேவநல்லூா் தொகுதிக்கு சோனப்ப ஸ்வந்த் யாம்கா் (94223 81652), கடையநல்லூா் தொகுதிக்கு ஷாம்ஸ் ஜாவித் அன்சாரி (99313 27453), தென்காசி தொகுதிக்கு நீரஜ்குமாா் (99442 15570), ஆலங்குளம் தொகுதிக்கு ரன்வீா் பிரசாத் (99442 15560) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்கள், கருத்துகளை தெரிவிக்க தென்காசி மாவட்டம், குற்றாலம் அரசு விருந்தினா் மாளிகையில் காலை 10 முதல் 11மணி வரை நேரிலும் பிற நேரங்களில் தொலைபேசியிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.