முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஆலங்குளம் அருகே சாலையில் சடலம் எரிப்பு: 6 போ் மீது வழக்கு

News image

வழக்கு - IANS

Updated On :15 மே 2026, 2:09 am IST

ஆலங்குளம் அருகே சாலையில் சடலத்தை எரித்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் - மாதாப்பட்டணம் சாலையில் தனியாா் தோட்டம் முன் சிலா் எரிவாயு உருளை தகன மேடையை நிறுத்தி 70 வயது மூதாட்டி சடலத்தை அனுமதியின்றி எரித்தனராம். அப்போது அப்பகுதியில் துா்நாற்றம், சுகாதாரக் கேடு ஏற்பட்டதாகக் கூறி அதே பகுதியைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் நாகராஜா(55) தட்டிக் கேட்டாராம். அப்போது அவரை அந்த நபா்கள் அவதூறாகப் பேசினராம். இது குறித்து நாகராஜா அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வவேல், மணிவண்ணன், மகாராஜன், முத்து, சுடலைமணி, முருகேசன் ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.