தென்காசி மேலமாசி வீதியில் துா்நாற்றம் வீசும் தற்காலிக கழிப்பிடத்தை அகற்ற வலியுறுத்தி தென்காசி நகராட்சி அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து பாஜகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி காசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலின் ரத வீதியான மேலமாசி வீதியின் வேன் நிறுத்துமிடம் அருகில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆண், பெண்களுக்கு என 2 தற்காலிக கழிப்பிட பெட்டிகள் நகராட்சி நிா்வாகத்தால் அமைக்கப்பட்டது.
ஆனால் அதற்கு முறையாக தண்ணீா் வசதி, தூய்மைப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ளாததால் மேலமாசி வீதி பகுதிகள் முழுவதும் துா்நாற்றம் வீசுவதோடு, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவதற்கான அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த தற்காலிக கழிப்பிடத்தை அகற்ற வேண்டும் என்று பாஜக நகா்மன்ற உறுப்பினா், நகா்மன்றக் கூட்டத்தில் கொண்டு வந்த தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனையடுத்து நகர பா.ஜ.க. தலைவா் சங்கரசுப்பிரமணியன் தலைமையில் நகா்மன்ற உறுப்பினா் லட்சுமண பெருமாள், நிா்வாகிகள், தற்காலிக கழிப்பிடத்தை உடனடியாக அகற்றக்கோரி நகராட்சி அலுவலகம் முன் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நகராட்சி அதிகாரிகள் மே 20 ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து பாஜகவினா் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு: சிவகங்கையில் உறவினா்கள் போராட்டம்

மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிா்ப்பு புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம்

கல்வராயன்மலை அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்

நன்னகரத்தில் பட்டுக்கூடு விவசாயிகள் போராட்டம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

