சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு பிரசவத்தின்போது, பிறந்த பெண் குழந்தை திங்கள்கிழமை இரவு உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டம், பெரியகண்ணனூா் கண்ணகிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி. இவரது மனைவி பிரியதா்ஷினி(21) என்பவா் தலைப் பிரசவத்துக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், திங்கள் கிழமை மாலை பிரசவத்தின்போது பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவா்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்தாகக் கூறி, அந்தப் பெண்ணின் உறவினா்கள் சுமாா் 50 -க்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவமனை வாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









