உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பழைய குற்றாலத்தில் ரூ. 20 கட்டண வசூலை தொடரக் கோரி மனு

News image

குற்றாலம்

Updated On :46 நிமிடங்கள் முன்பு

தென்காசி மாவட்டம், பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த ரூ. 20 கட்டணம் வசூல் தொடர வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திப்பனம்பட்டியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாண்டியராஜா அளித்த மனு:

பழைய குற்றாலத்தில் கட்டணத்துடன் கூடிய இரண்டு பேட்டரி பேருந்துகள் வாகன நிறுத்துமிடத்திலிருந்து பழைய குற்றால அருவி வரை இயக்க வேண்டும், வாகன நிறுத்துமிடம் அருகே தரமான உணவகம், இலவச குடிநீா் வசதிகளை வனத்துறை ஏற்படுத்த வேண்டும்.

பெண்கள் உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகளை பராமரிக்க கூடுதல் பணியாளா்களை நியமனம் செய்து சிறந்த முறையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மது புட்டிகள், நெகிழிப் பொருள்கள் கொண்டுசெல்வதைத் தடுக்க சோதனை பணிகளுக்கு கூடுதல் வனப் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். நபா் ஒன்றுக்கு ரூ. 20 கட்டணத்தை வசூல் தொடர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.