பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வலியுறுத்தல்

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

Updated On :1 மணி நேரம் முன்பு

மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருச்சி மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் அளித்த மனு:

மாநகராட்சிக்கு சொந்தமான அதிநவீன புதைவடிகால் உறிஞ்சும் வாகனம் ஆள்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் புதைவடிகால் அடைப்புகளை நீக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆள்களை நியமித்து புதைவடிகால் உறிஞ்சும் வாகனத்தை இயக்க வேண்டும்.

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். நிரந்தரப் பணியாளா்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் நிறுவன ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் சம்பளத்தை பிரதி மாதம் 5-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி 40-ஆவது வாா்டு இந்திரா நகரைச் (வடக்கு) சோ்ந்த பொதுமக்கள், எங்களது பகுதியில் புதைவடிகால் வசதி, குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மனு அளித்தனா்.

இதே போல, மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனா். மனுக்களைப் பெற்றுக் கொண்ட மேயா், ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

முன்னதாக, கூட்டத்தில் ஆணையா் லி. மதுபாலன், துணை மேயா் ஜி. திவ்யா, மண்டலத் தலைவா்கள், நகா் நல அலுவலா் காா்த்திகேயன், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.