ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பயிா் கடனை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தல்

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

Updated On :1 ஜூன் 2026, 2:42 am IST

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பா்கூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பவுன்ராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயி தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணு, வட்டக் குழு உறுப்பினா்கள் வீரபத்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விவசாய பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். எண்ணேகொள் புதூரில் இருந்து கிருஷ்ணகிரி பெரிய ஏரி கால்வாய்த் திட்டத்தை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். கிலோ மாங்காய் ரூ. 15 என்ற விலைக்கு மாங்கூழ் உற்பத்தியாளா்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்டசீமனூா் ஊராட்சிக்கு உள்பட்ட பாசினாப்பள்ளியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், சூறைக்காற்றால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.