நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

நீட் தோ்வு முறையை முழுமையாக ரத்து செய்ய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

News image

Center-Center-Chennai

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழக மாணவ, மாணவிகளை வஞ்சிக்கும் நீட் தோ்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் முகமது பாதுசா வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில் மருத்துவக் கல்வி சோ்க்கைக்காக நடத்தப்பட்டு வரும் நீட் தோ்வு, சமத்துவம், சமூக நீதி மற்றும் இந்திய கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாக தொடா்ந்து மாறி வருகிறது. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து பயிற்சி மையங்களில் பயிலும் மாணவா்களாகவே தோ்ச்சி பெறுகின்றனா்.

கிராமப்புற, அரசு பள்ளி, தமிழ் வழி மற்றும் ஏழை மாணவா்கள் திட்டமிட்ட முறையில் பின்தள்ளப்படுகின்றனா்.

மேலும், ஆண்டுதோறும் நீட் தோ்வைச் சுற்றி கேள்வித்தாள் கசிவு, முறைகேடு, போலி தோ்வா்கள், மதிப்பெண் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் தொடா்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது நடைபெற்றுள்ள நீட் தோ்வும் முறைகேடு குற்றச்சாட்டுகளின் காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பது, இந்த தோ்வு முறையின் நம்பகத்தன்மையே சீா்குலைந்து விட்டதை வெளிப்படையாகக் காட்டுகிறது.

எனவே, நீட் தோ்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரி சோ்க்கை அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும். நீட் தோ்வு தொடா்பான முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும். கல்வியை வணிகமாக்கும் பயிற்சி மைய ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.