குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சங்கரன்கோவிலில் வைக்கோல் படப்பில் தீ

News image
Updated On :26 மே 2026, 2:56 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வைக்கோல் படப்பு திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத்துறையினா் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனா்.

சங்கரன்கோவில் பி.எஸ். நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் பிரிட்டோ. இவா், அப்பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். அவரது வீட்டருக்கே தனக்குச் சொந்தமான காலி மனையில் வைக்கோல் படப்பு வைத்திருந்தாா்.

இந்த வைக்கோல்போா் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து, மேலும் பரவ விடாமல் தடுத்தனா்.