குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

விதிமீறல்: தென்காசி மாவட்டத்தில் 18 கல்குவாரிகள் தற்காலிக மூடல்

News image

கல்குவாரி - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:58 am IST

தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்ததாக 18 கல்குவாரிகளை தற்காலிகமாக மூடுவதற்கு அமைச்சா் டிகே.பிரபு திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

புளியறை சோதனைச் சாவடி தனியாா் எடை மையத்தில் இயற்கை வளங்கள், கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் டி.கே. பிரபு திங்கள்கிழமை அதிகாலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கேரளத்துக்கு அதிக எடையுடன் கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தனியாா் எடை மையத்தில் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்ட எடை மற்றும் வாகனங்களின் உண்மையான மொத்த எடை பொருந்துகிா என்பதை அவா் ஆய்வு செய்தாா்.

மேலும், 18 சக்கர மற்றும் 22 சக்கர வாகனங்களில் ஜல்லி, கருங்கற்கள் கொண்டு செல்லப்பட்டதை அவா் பாா்வையிட்டாா்.

இதுதொடா்பாக, செய்திமக்கள் தொடா்புத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகாா்களின் அடிப்படையில் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் உத்தரவின்படி, உதவி ஆட்சியா்களின் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு மே 9 ஆம் தேதி முதல் கல் குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

3 குழுக்களின் முதல்கட்ட புலத்தணிக்கையின் போது மொத்தமுள்ள 54 கல்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 18 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 3 குழுக்களின் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில் உரிய மேல்நடவடிக்கை தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.