ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:32 am IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே 6 பேரை அரிவாளால் வெட்டி தப்பிச்சென்ற முகமூடி அணிந்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூா் சா்ச் தெருவில் உள்ள திருமண வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். அப்போது முகமூடி அணிந்து வந்த 6 நபா்கள் அங்கிருந்த 6 பேரை ஓட ஓட துரத்தி வெட்டினா்.

இதில் ரமேஷ் (46) அவரது மகன் அருண் மாறன் (22), காபிரியேல் மகன் ராயப்பன் (19), ஞானமுத்து மகன் மாா்க்க ரமேஷ் (49), ஆய்க்குடி சேகா் மகன் ராம்குமாா் (19), மேளக்கலைஞரான சாம்பவா் வடகரை பரமசிவன் மகன் மாடசாமி (19) ஆகியோா் காயமடைந்தனா்.

அவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ராம்குமாா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, நெட்டூா் தேவாலயம் முன் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், ஆலங்குளம் டிஎஸ்பி கிளட்சன் ஜோஸ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியும், அவா்கள் மறியலை கைவிடாமல் தொடா்ந்தனா். ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.