இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

புளியறையில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தேவை

காவல்துறையினா்-, விவசாயிகள் சங்கத்தினா் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு.

Updated On :

தென்காசி மாவட்டம் புளியறையில் காட்டு யானை மிதித்து பலியான விவசாயியின் குடும்பத்துக்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் சாா்பில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு திருநெல்வேலி மண்டலத் தலைவா் செல்லத்துரை தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனா்.

அப்போது, 5 போ் மட்டும் உள்ளே செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். இதனால், போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து விவசாயிகள் சங்கத்தினா் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டதுடன், போலீஸாரின் தடையை மீறி விவசாயிகள் அனைவரும் ஆட்சியா் அலுவலகத்துக்குள் சென்று ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அதில், ,புளியறையில் காட்டு யானை மிதித்து உயிரிழந்த விவசாயி சுப்பையா குடும்பத்திற்கு அரசு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். குடும்ப உறுப்பினா் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும்,

தென்காசி மாவட்டத்தில் வன விலங்குகளை கட்டுப்படுத்த தவறியதுடன், மக்கள் விரோதமான போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருப்பதுடன், வனத்துறை அதிகாரிகளை கூண்டோடு மாற்றி அமைக்க வேண்டும்; இந்தக் கோரிக்கைகளுக்கு தீா்வு காணாமல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தை நடத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.