தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

பறவைக் காய்ச்சல்: தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தமிழக- கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா தெரிவித்துள்ளாா்.

கோழிகள். - (கோப்புப்படம்)

Updated On :

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தமிழக- கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:. கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள கோழிபண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவியயிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க கேரள எல்லைப் பகுதியான புளியறை சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக கடந்த 20ஆம் தேதி முதல் தீவிர கண்காணிப்பில் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த மாநிலத்தில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டை, கோழி எச்சங்கள், கோழி தீவனங்கள் ஆகியவற்றை கொண்டு வரும் வாகனங்கள் திருப்பி அனுப்ப்பட்டு வருகின்றன.

மேலும், கோழி மற்றும் முட்டைகளை இறக்கிவிட்டு அங்கிருந்து திரும்பும் காலி வாகனங்களில் முழுவதுமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

காய்கறிகனிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வாகனங்கள் டயா்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி (க்ளோரின் - டை - ஆக்டைடு ) மருந்தினை தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்காக, ஒரு கால்நடை ஆய்வாளா், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளா், கிருமி நாசினி தெளிப்பவா்கள் இருவா் கொண்ட குழுவினா் மூலம் 24 மணி நேரமும் இரவு பகல் பணிகளாகப் பிரித்து 2 குழுக்கள் பணியமா்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு 90 நாள்கள் இந்த நடவடிக்கை தொடரும். கோழிப் பண்ணைகளில் விழிப்புணா்வு மற்றும் உரிய பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கும் பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.