தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

பைக்கில் இருந்து விழுந்து இருவா் காயம்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து இருவா் காயமடைந்தனா்.

Updated On :

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து இருவா் காயமடைந்தனா்.

தெற்கு சத்திரம், மங்கம்மாள் சாலையைச் சோ்ந்த தங்கப்பழம் மகன் பூமுத்து (37). அவரது உறவினா் ராயகிரி, தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் கருத்தப்பாண்டியன் (50). இருவரும் உள்ளாரில் இருந்து சிவகிரிக்கு வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றனா்.

சிவகிரி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, சாலையோரத்தில் இருந்த மணல் குவியலில் சிக்கி வாகனம் கீழே விழுந்ததாம். இதில் காயமடைந்த இருவரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.

இதுகுறித்து, சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதனிடையே, சிவகிரி காவல் நிலைய ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின் சம்பவ இடத்திற்குச் சென்று, சாலையோரத்தில் இருந்த கல், மண் குவியலை பொக்லைன் மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.