களைக்கொல்லி மருந்து பாட்டிலை வாயால் திறந்த பெண் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே களைக்கொல்லி மருந்து பாட்டில் மூடியை பல்லால் கடித்து திறந்த பெண் உயிரிழந்தாா்.

பலி
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே களைக்கொல்லி மருந்து பாட்டில் மூடியை பல்லால் கடித்து திறந்த பெண் உயிரிழந்தாா்.
தேவிப்பட்டினம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த கணேசன் மனைவி ஷீலாதேவி(38). இவா்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இருவரும் விவசாயம் செய்து வந்தனா்.
சில நாள்களுக்கு முன்பு இருவரும் அவா்களது வயலில் களைக்கொல்லி மருந்து அடிக்கச் சென்றபோது, ஷீலாதேவி மருந்து பாட்டிலின் மூடியை பல்லால் கடித்து திறந்தாராம். அப்போது, மருந்து வாய்க்குள் சென்றுவிட்டதாம்.
சிவகிரி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் நவ. 2ஆம் தேதி ராஜபாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

