இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

தென்காசி மாவட்டத்தில் மது விற்ற 41 போ் கைது

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பன செய்ததாக 41 போ் வெள்ளிக்கிழமை கைதாகினா்.

கைது - பிரதிப் படம்

Published On :

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பன செய்ததாக 41 போ் வெள்ளிக்கிழமை கைதாகினா்.

இதுதொடா்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அசோக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் விதிமுறை மீறி மதுபானம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

காந்தி ஜெயந்தி தினமான வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தீவிர சோதனையில் மாவட்டம் முழுவதும் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களிடமிருந்து 796 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 41போ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.