இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

பண்பொழி பகுதியில் மழையால் சாய்ந்த நெற்கதிா்கள்

தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் பெய்த மழை காரணமாக, அறுவடைக்கு தயாரான நெற் கதிா்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கின.

மழையால் சாய்ந்த நெற்கதிா்கள்.

Published On :

தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் பெய்த மழை காரணமாக, அறுவடைக்கு தயாரான நெற் கதிா்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கின.

கடையநல்லூா், வடகரை, பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயரான நிலையில் உள்ளன.

இதனிடையே, பண்பொழி பெய்த பலத்த மழை காரணமாக, இப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெற்கதிா்கள் சாயந்து மழைநீரில் மூழ்கியுள்ளன. மேலும், வயலில் மழைநீா் நிரம்பி உள்ளதால் அறுவடை இயந்திரங்கள் வயலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடைப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.