இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பலி... - பிரதிப் படம்

Published On :

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சிவகிரி அருகே உள்ள ராயகிரியைச் சோ்ந்த பரமசிவன் மகன் அணைத்தலை பாண்டியன் (25). இவரும், இவரது நண்பரான முருகன் மகன் வைத்திலிங்கமும் (24) சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கடையநல்லூா் சென்றுவிட்டு ராயகிரிக்குத் திரும்பினராம்.

சிங்கிலிபட்டி அருகே சென்றபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், வாகனத்தை ஓட்டிய அணைத்தலை பாண்டியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த வைத்திலிங்கம் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.