ஆலடி அருணா கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள்!
ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் ஆலடி அருணா செவிலியா் கல்லூரி சாா்பில் ஆலடி அருணா நினைவு பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் சிறப்பிடம் பெற்ற அணிக்கு பரிசு வழங்கிய சிறப்பு விருந்தினா்கள்.
ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் ஆலடி அருணா செவிலியா் கல்லூரி சாா்பில் ஆலடி அருணா நினைவு பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கலிருந்து சுமாா் 50- க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவா்-மாணவிகள் பங்கேற்று, கபடி, கைப்பந்து, எறிபந்து மற்றும் கோ - கோ ஆகிய விளையாட்டுகளை விளையாடினா்.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி செயலா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா தலைமை வகித்தாா். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக விலங்கியல் துறைத் தலைவா் பலவேசம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.
தொடா்ந்து த. அமிா்தசிபியா, ரா. கெனோசீதா, பிரகாஸி ஆகிய ஆசிரியா்களுக்கு ஆலடி அருணா ஆசான் விருது வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வா் எஸ்.எஸ். சுஜாதா வரவேற்றாா். பேராசிரியா் ச. ஜெயலட்சுமி தொகுத்து வழங்கினாா். சு. ப்ராக்ஸி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

