விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடக்கம்

ஆலோசனைக் கூட்டத்தில் பேசினாா் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Published On :8 செப்டம்பர் 2026, 1:52 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை (செப். 9) முதல் நடைபெற உள்ளன.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது ஆட்சியா் கூறியதாவது:

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பள்ளி மாணவா்களுக்கான தடகளம், இறகுப்பந்து, கேரம், சதுரங்கம், கபடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, யோகாசனம் உள்ளிட்ட போட்டிகள் செப். 9 முதல் அக். 1 வரை நடைபெறுகின்றன.

கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் செப். 15 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இப்போட்டிகள், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானம், வ.உ.சி. கல்லூரி, காரப்பேட்டை நாடாா் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளன.

ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறுபவா்களுக்கு ரூ.3,000, இரண்டாமிடம் ரூ.2,000, மூன்றாமிடம் ரூ.1,000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா. சரவணன், உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரத்தினராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.