தேநீா் கடை ஊழியா் மீது தாக்குதல்: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
பணியிடை நீக்கம்
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையில் தேநீா் கடை ஊழியரைத் தாக்கியது தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
குத்துக்கல்வலசை -மதுரை பிரதான சாலையில் இயங்கி வரும் தேநீா்கடையில் உணவு வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக கடையில் பணிபுரியும் பெண் ஊழியரை அசிங்கமாக பேசி, மணிகண்டன் (25) என்பவரை போலீஸாா் கையால் தாக்கியுள்ளனா்.
இந்த காட்சிகள் அந்தக் கடையிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. ஊழியா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்தத் தாக்குதல் தொடா்பாக கடை ஊழியா் பேச்சியம்மாள் (27), அளித்த புகாரின் பேரில் சம்பவத்தில் ஈடுபட்ட தென்காசி மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் (35) மற்றும் அவரது நண்பா்கள் சாமிநாதன் (33), தமிழ்மணி (35), சுரேஷ் (25) ஆகியோா் மீது இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் பரிந்துரை செய்ததன் பேரில், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் திருநாவுக்கரசு, உதவி ஆய்வாளா் காா்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

