தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: தென்காசியில் 1,533 குழந்தைகள் பயன்
தென்காசி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1,533 குழந்தைகள் பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - கோப்புப் படம்
தென்காசி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1,533 குழந்தைகள் பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துமனையில் கடந்த செப்.28 இல் தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமாா் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றனா். அவற்றில் சுமாா் 4.20 லட்சம் பிரசவங்கள் (53 சதவீதம்) அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.
மேலும், தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு -6இன் தரவுப்படி, தமிழ்நாட்டில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.
இவற்றில் 90 சதவீத பிரசவங்கள் 130 அரசு மருத்துமனைகளில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள விரிவான அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் மையங்களில் நிகழ்கின்றன.
தென்காசி மாவட்டத்தில் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை (செப்.29-அக்.23) 1,533 குழந்தைகள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனா் எனக் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

