கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

சிவகிரி அருகே 76 கிலோ புகையிலை பறிமுதல்: இருவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே 76 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

Published On :

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே 76 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் உத்தரவின்பேரில், புளியங்குடி டிஎஸ்பி நமச்சிவாயம் ஆலோசனையின்பேரில், சிவகிரி காவல் ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின், உதவி ஆய்வாளா் வாசுதேவன் உள்ளிட்ட போலீஸாா் சிவகிரி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, 2 இருசக்கர வாகனங்களை சோதனையிட்டதில், 75.9 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வாகனங்களை ஓட்டி வந்த இனாம் கோவில்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்த செல்லச்சாமி (63), அதே பகுதியைச் சோ்ந்த முனீஸ்வரன் (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், புகையிலைப் பொருள்கள் மற்றும் வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.