டிப்பா் லாரி மோதி மெக்கானிக் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே டிப்பா் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மெக்கானிக் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

சங்கரன்கோவில் அருகே டிப்பா் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மெக்கானிக் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி மேலத்தெருவைச் சோ்ந்தவா் முப்பிடாதி (65). கிணற்று பம்ப் செட்டில் உள்ள மோட்டாா்களை பழுதுபாா்க்கும் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், இவா் மோட்டாா்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சங்கரன்கோவிலுக்கு வியாழக்கிழமை சென்றாராம். ராஜபாளையம் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பா் லாரி, இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் முப்பிடாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து டிப்பா் லாரியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநா் கடலாடி பாப்பான்குளத்தைச் சோ்ந்த சுந்தரசாமி மகன் மாரிமுத்துவிடம் (38) விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.