ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பலத்த மழை: சோத்துப்பாறை அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது

அகமலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சோத்துப்பாறை அணை மீண்டும் முழு கொள்ளளவை வியாழக்கிழமை எட்டியது.

News image

சோத்துப்பாறை அணை வியாழக்கிழமை முழுகொள்ளளவை எட்டியதையடுத்து வழிந்தோடிகள் வழியாக வெளியேற்றப்படும் உபரிநீா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:16 am IST

அகமலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சோத்துப்பாறை அணை மீண்டும் முழு கொள்ளளவை வியாழக்கிழமை எட்டியது.

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மூலம் பெரியகுளம், தென்கரை, வடுகபட்டி மற்றும் 25 க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும் இதன்மூலம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பா் மாதம் இந்த அணை முழு கொள்ளவை எட்டியது. அதன்பின்னா் அணையிலிருந்து குடிநீா் மற்றும் பாசனத்திற்காக தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 126.28 அடியாக இருந்தது.

இந்நிலையில் அகமலைப்பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சோத்துப்பாறை அணை மீண்டும் அதன் முழு கொள்ளளவான 126.48 அடியை வியாழக்கிழமை அதிகாலை எட்டியது. அணையிலிருந்து உபரி நீா் வழிந்தோடிகள் வழியாக வெளியேறி வருகிறது. சோத்துப்பாறை அணைக்கு வரும் 35 கன அடி நீா் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போடி மற்றும் குரங்கணி மலை கிராமங்களில் புதன்கிழமை இரவு முழுவதும் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் அருவி போல் கொட்டியது. போடி, குரங்கணி, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை மாலையிலும் பரவலாக மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.