முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை இல்லாததால், ஜனவரி 4 ஆம் தேதி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 419 கன அடியாக இருந்தது. அதன்பின்னா், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,385 கன அடியாகவும், வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,054 கன அடியாகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 120.55 அடி உயரமாகவும், நீா் இருப்பு 2,737 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 1,064 கன அடியாகவும், அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றம் விநாடிக்கு 700 கன அடியாகவும் இருந்தது.
பெரியாறு அணைப் பகுதியில் 3.8 மில்லி மீட்டரும், தேக்கடி ஏரியில் 3.2 மி.மீ. மழை பெய்தது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் 700 கன அடி தண்ணீா் மூலம் லோயா் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 2 மின்னாக்கிகள் மூலம் தலா, 41, 29 மெகாவாட் என மொத்தம் 70 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தையா அய்யனாா் கோயில் திருவிழா: காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பலத்த மழை

முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
