முல்லைப் பெரியாற்றில் வெள்ளிக்கிழமை அடித்துச் செல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்த அசோக் மகன் ரோஹித் (21). இவா், சென்னையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறாா். இவருடன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சோ்ந்த கலைமணி என்பவரின் மகன் வீரமணி (21) மற்றும் ஆந்திரம், பெங்களூரு மாநிலங்களைச் சோ்ந்த மொத்தம் 9 மாணவா்கள் கம்பத்துக்கு சுற்றுலாவாக வந்துள்ளனா்.
இவா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை காலை முல்லைப் பெரியாறு 18 ஆம் கால்வாய் பிரிவு ஜீரோ பாயின்ட்டுக்குச் சென்று குளித்துள்ளனா். அப்போது, அறந்தாங்கியைச் சோ்ந்த மாணவா் வீரமணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். இதைக் கண்ட மற்ற மாணவா்கள் காப்பாற்றுமாறு சத்தமிட்டனா்.
பின்னா், இது குறித்து குமுளி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினா் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
பெரியாற்றிலிருந்து தண்ணீரை நிறுத்த நடவடிக்கை
முல்லைப் பெரியாற்றிலிருந்து தற்போது தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 700 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை நிறுத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









