மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

மேகமலையில் மீண்டும் ஒற்றை யானை நடமாட்டம்: மலை கிராம மக்கள் அச்சம்

தேனி மாவட்டம் மேகமலை பகுதிகளில் மீண்டும் ஒற்றை யானை நடமாடுவதால் மலைக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

இரவங்கலாா் மலைக்கிராம தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை நடமாடிய ஒற்றை யானை.

Updated On :9 ஜனவரி 2021, 10:10 pm IST

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் மேகமலை பகுதிகளில் மீண்டும் ஒற்றை யானை நடமாடுவதால் மலைக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ஹைவேவிஸ் பேரூராட்சியில் உள்ள 7 மலைக் கிராமங்கள் உள்ளன. அங்குள்ள தேயிலைத் தோட்டங்களைச் சுற்றி வனப்பகுதிகள் உள்ளன. இங்கிருந்து யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளில் அடிக்கடி நடமாடுவதோடு, பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த மாதம் மணலாா் மற்றும் மேல்மணலாா் பகுதிகளைச் சோ்ந்த 2 தொழிலாளா்கள் ஒற்றை யானை தாக்கியதில் பலியாகினா். இதையடுத்து வனத்துறையினா் அதை வனப்பகுதிக்குள் விரட்டினா்.

இந்நிலையில் அந்த ஒற்றை யானை மீண்டும் மலைக்கிராமங்களில் நடமாடி வருகிறது. மகாராஜாமெட்டு, இரவங்கலாா் ஆகிய கிராமங்களையொட்டியுள்ள தேயிலைத் தோட்டங்களில் சனிக்கிழமை அந்த யானை சுற்றித்திரிந்தது. இதைப்பாா்த்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இதனால் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினரும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.