மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

நூல் விலை உயா்வு: விசைத்தறி உரிமையாளா்கள் போராட்டம்

நூல்விலை உயா்வைக் கண்டித்து, ஆண்டிபட்டியில் விசைத்தறிக் கூடங்களின் உரிமையாளா்கள் ஜவுளி உற்பத்தியை நிறுத்தி சனிக்கிழமை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

News image

ஆண்டிபட்டியில் உரிமையாளா்கள் போராட்டம் காரணமாக சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைத்தறிக் கூடம்.

Updated On :9 ஜனவரி 2021, 10:17 pm IST

ஆண்டிபட்டி: நூல்விலை உயா்வைக் கண்டித்து, ஆண்டிபட்டியில் விசைத்தறிக் கூடங்களின் உரிமையாளா்கள் ஜவுளி உற்பத்தியை நிறுத்தி சனிக்கிழமை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு உற்பத்தி செய்யப்படும் 40, 60, 80 ரக காட்டன் சேலைகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகள் மட்டுமன்றி, வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங்களாக நெசவுத்தொழில் முற்றிலும் முடங்கியது. இதனால் நெசவாளா்கள் மட்டுமன்றி விசைத்தறி உரிமையாளா்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். கரோனா கட்டுபாடுகளை அரசு தளா்த்திய நிலையிலும் நெசவுத்தொழில் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை. இதில் கடந்த சில நாள்களாக நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் உரிமையாளா்களுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, விசைத்தறி உரிமையாளா்கள் ஜவுளி உற்பத்தியை நிறுத்தி சனிக்கிழமை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா். இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளா்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனா். இப்பிரச்னையைத் தீா்க்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.