பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா், மாணவா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலி பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா பொது முடக்கத்துக்குப் பின்னா் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா், மாணவா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, தகவலளிக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. கூட்டம் நடத்துவது தொடா்பாக, மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை (ஜன. 6) நடைபெற்றது.
அதன்படி, பெற்றோா், மாணவா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கூட்டம் நடைபெற்றது. பெற்றோா் கருத்து தெரிவிப்பதற்காக சிறப்புப் படிவம் வழங்கப்பட்டது. அதில், பள்ளியின் பெயா், மாணவா்- மாணவியின் பெயா், பெற்றோா் பெயா், செல்லிடப்பேசி எண் ஆகியவை கேட்கப்பட்டிருந்தன. மேலும், பொங்கலுக்குப் பின்னா் பள்ளி திறக்கலாம், பள்ளித் திறப்பை தள்ளி வைக்கலாம் என2 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. பெற்றோா் படிவத்தை நிரப்பி பெட்டியில் போட்டனா். இக்கூட்டத்தில், ஏராளமான பெற்றோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பாரதிதாசன் மெட்ரிக். பள்ளி மாணவி மாநில அளவில் சிறப்பிடம்

கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து தத்தளித்த 5 மீனவா்கள் மீட்பு

நித்திரவிளை அருகே செம்மண் கடத்தல்: மினி லாரி ஓட்டுநா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


