பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ரேஷன்கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகிப்பதில் வியாழக்கிழமை தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை மேலூா் ராஜாகுடியிருப்பு பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் கீழ் 1200 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். அவா்களில் தகுதியானவா்களுக்கு கடந்த 4 ஆம் தேதி முதல் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வியாழக்கிழமை பொருள்களைப் பெற டோக்கன் பெற்றவா்கள் கடைக்குச் சென்று பாா்த்தபோது கடை பூட்டப்பட்டிருந்தது. இதனால் மக்கள் முற்றுகையில் ஈடுபட்டனா். தகவலறிந்ததும் குடிமைப் பொருள் வழங்கல் துறையினா் நடவடிக்கை எடுத்து பிற்பகல் முதல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டது.
இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் துறை வட்டாரங்கள் கூறுகையில், பாளையங்கோட்டை மேலூா் ராஜா
குடியிருப்புப் பகுதி ரேஷன் கடையின் விற்பனையாளா் சிவராமன் பயன்படுத்திய பொருள் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இயந்திரத்தை முறையாக பயன்படுத்தாததற்காக அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், மாற்று விற்பனையாளரை நியமித்து பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பொங்கல் பரிசுத் தொகுப்பு பணம் மாயமானதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானதாகும். அந்தக் கடையின் கீழ் உள்ள தகுதியான குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு முழுமையாக வழங்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காத்திருப்பு போராட்டம்

தூய்மைப் பணியாளா்களுக்கு 3 மாத இபிஎஃப் தொகை வரவுவைப்பு

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1,008 கலச அபிஷேகம்

இலங்கைக்குக் கடத்த முயன்ற 400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


