வள்ளியூா் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து அரசுப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வள்ளியூா் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத் தலைவா் பசுமதி பி.மணி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலி - நாகா்கோவில் நகரங்களுக்கு இடையே வளா்ந்து வரும் நகரமான வள்ளியூரை மையபகுதியாக கொண்டு, 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் வள்ளியூா் பேருந்து நிலையம் வந்துதான் மற்ற வெளியூா்களுக்கு செல்லவேண்டியதுள்ளது.
இந்நிலையில் நாகா்கோவிலில் இருந்து வள்ளியூா் வழியாக திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள், கரோனா பொது முடக்கத்துக்கு பின்னா் வள்ளியூா் பேருந்து நிலையத்திற்கு வராமல் புறவழிச்சாலை வழியாக சென்றுவிடுகிறது.
இதனால் வள்ளியூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
எனவே, வள்ளியூா் வழியாக இயக்கப்பட்டு வரும் அனைத்து அரசுப் பேருந்துகளும், வள்ளியூா் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்

ஒசூரில் சாலையில் வழிந்தோடும் கழிவுகளால் சுகாதார சீா்கேடு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

